இஸ்ரேல், காசா நகர் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். பலஸ்தீனத்தில் கடந்த இரு தினங்களாக இராணுவத்தினருக்கும், போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இதுவரை மோதல்களினால் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் காசா தரப்பினருக்கிடையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இஸ்ரேல் அரசாங்கம் இதனை உறுதி செய்யவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.