fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக தமிழ் சமூகம் இலங்கை மக்களுக்கு முக்கிய கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:36

உலக தமிழ் சமூகம் இலங்கை மக்களுக்கு முக்கிய கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் போது பிரதான வேட்பாளர்களின் அரசியல் நோக்கம் மற்றும் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு உலக தமிழர் பேரவை இலங்கை தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கொள்கை பிரகடனம் ஜனநாயக மீள் புனரமைப்புடன் கூடியதென குளோபல் தமிழ் போரம் எனப்படும் உலக தமிழர் பேரவை அமைப்பு விசேட அறிவிப்பொன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளது.

இதன் ஊடாக தமிழ் மக்களுக்கு முக்கியமான அரசியல் அமைப்பு சீர்திருத்தம் அதிகாரப் பகிர்வு மற்றும் மீள் கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்கள் போன்று சர்வதேச சமூகத்துடனான ஒப்பந்தங்கள் மற்றும் யோசனைகளுக்கு மதிப்பளிக்கின்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபே ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் ஜனநாயக ரீதியான வாய்ப்புகள் ஊடாக செயற்படுவதற்கு அர்ப்பணிக்கின்ற விடயங்களை அவரின் கொள்கை பிரகடனத்தில் காணமுடியவில்லை என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க