fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ காரணமாக சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:21

அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீ காரணமாக சில பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை

அவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ காரணமாக குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் பகுதிகளில் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட புதர்கள் மற்றும் பற்றைக்காடுகள் இன்னும் எரிந்து கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே நேற்றைய தினம் நியுசவுத் வேல்ஸ்ஸில் மாத்திரம் 50 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. எனினும் எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இன்று ஆபத்தான வளிமண்டல மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவுஸ்திரேலிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை நியூ சவுத் வேல்ஸின் பேரழிவு கட்டத்திலிருந்து அபாய கட்டத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தீ பரவல் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்பு பிரிவினர் அறிவுறுத்திவருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கி;ன்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:21

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க