fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாளாந்த நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:19

நாளாந்த நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், உயர்மட்டத்தை அண்மித்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாளாந்த நீர்மின் உற்பத்தி 50 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சமனலவௌ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 100 வீதமாகவும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 94.6 வீதமாகவும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 90.5 வீதமாகவும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 87.7 வீதமாகவும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 80.2 வீதமாகவும் ரன்தெணிகல நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 49.2 வீதமாகவும் உயர்வடைந்துள்ளதாகத் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க