fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:13

ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நள்ளிரவும் 12 மணிக்கு பின் மௌன காலம் அமுலில் இருக்கும். இதற்கு பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாகவேனும் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளை மீறும் சமூக ஊடகங்களுக்கு எதிராக எழுத்துமூலமான சாட்சிகள் கிடைக்குமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் இடம்பெறுகின்ற இறுதி பிரசார கூட்டங்கள் தொடர்பான தகவல்களை ஒளி, ஒலிபரப்பு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இறுதி மக்கள் சந்திப்பு இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு , மருதானையில் இடம்பெறவுள்ளது. அதேபோல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபே ராஜபக்ஷவின் இறுதி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பிலியந்தலையில் இடம்பெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின் இறுதி கூட்டம் மஹரகமையில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களும் நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். வாக்களித்தல், வாக்கெண்ணுதல் மற்றும் பெறுபேறு வெளியிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 13, 2019 15:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க