மண்டதீவு பகுதிக்கு அருகிலுள்ள களப்பு பகுதியிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 13:22

மண்டதீவு பகுதிக்கு அருகிலுள்ள களப்பு பகுதியிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதி மீட்பு

மண்டதீவு பகுதிக்கு அருகிலுள்ள களப்பு பகுதியிலிருந்து சந்தேகத்திற்கிடமான பொதியொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது. களப்பில் மிதந்துகொண்டிருந்த பொதியை சோதனையிட்ட போது அதிலிருந்து 65 கிலோகிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவை அடுத்தகட்ட விசாரணைகளுக்கென யாழ் சுங்கப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கென தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 12, 2019 13:22

Default