ஆப்கானிஸ்தான் – தலிபான் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரச தரப்பினருக்கும் தலிபான் அமைப்பினருக்குமிடையில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமாதானம் மற்றும் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதாக சீனா குறிப்பிட்டுள்ளது.