fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி நாளை வரை..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2019 12:24

ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி நாளை வரை..

ஜனாதிபதி தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணி நாளை வரை இடம்பெறவுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள தற்காலிக அடையாள அட்டைகள் தற்போது விநியோகிக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை அவசியமாகும். தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இம்முநை ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் சுமார் 3 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் அவர்களுக்கான அனைத்து தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 11, 2019 12:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க