கொழும்பு – கோட்டை முதலிகே மாவத்தையில் கட்டடமொன்றின் வாகன தரிப்பிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் 47 மோட்டார் சைக்கிள்களும் இதனால் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
4 தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக கொழும்பு தீ யணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கு பொலிசார் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.