சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட உணவு பொதிசெய்யும் பொலித்தீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பன்னிப்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 டொன் பொலித்தீன்கள் மீட்கப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை மற்றும் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவளைப்பை முன்னெடுத்ததாக அதிகார சபையின் விசாரணைப்பிரிவு பணிப்பாளர் என்.எஸ்.கமகே தெரிவித்தார்.