உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் பிரயோக வேலைத்திட்டம்
Related Articles
உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பாதுகாப்பதற்கும் கட்டியெழுப்புவதற்கும் அரச தலையீட்டுடன் பிரயோக வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்நாட்டு கைத்தொழிலாளர்களை பலப்படுத்துவதனால் மாத்திரமே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டம் நாத்தாண்டிய நகரில் இடம்பெற்றது. வெற்றிகர நோக்கு, சேவை செய்யும் நாடு என்னும் தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம்பெற்றது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பெந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.