fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது எரிவாயு ஏற்றிய கப்பல்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 5, 2019 15:09

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது எரிவாயு ஏற்றிய கப்பல்

எரிவாயு பற்றாக்குறையை தீர்ப்பு வைப்பதற்காக லிற்றோ கேஸ் கம்பனி 12 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவை உடனடியாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

நிதியமைச்சின் கீழ் காணப்படுகின்ற லிற்றோ எரிவாயு கம்பனி இந்த உடனடி கொள்வனவை செய்யவுள்ளதாகவும் குறித்த எரிவாயு உடனடியாக சந்தைக்கு விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூவாயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் கடந்த சனி கிழமை நாட்டை வந்தடைந்தது. மேலும் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாளை இலங்கையை வந்தடையவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் சனி கிழமையும் 3 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையான கொள்முதல் செயல்பாடுகளின் கீழ் கோரப்பட்டுள்ள 6 ஆயிரம் மெடரிக் தொன் எரிவாயு அடங்கிய இரண்டு கப்பல்கள் அடுத்த வாரம் அளவில் இலங்கையை வந்தடையவுள்ளன.

இதற்கமைய எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் இவ்வாரத்திற்குள் பூர்த்தியாகுமென நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேவையற்ற முறையில் அச்சம் கொள்ள வேண்டாமென அரசாங்கம் பொது மக்களை கேடடுள்ளது. எரிரவாயு பற்றாக்குறையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி எரிவயுவை கூடிய விலைக்கு விற்பனை செய்த 40 பிரதிநிதிகளை நுகர்வோர் அதிகாரி சபை சுற்றி வளைத்துள்ளதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவும் உள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 5, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க