4 ஆயிரத்து 475 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது
Related Articles
நுவரெலியாவில் 4 ஆயிரத்து 475 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா அண்டர்பேங்க் பகுதியில் வைத்து ஆயிரத்து 600 கிலோ கிராம் கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டது.
அதன் பின்னர் பம்பரகலை தோட்டப்பகுதியில் வைத்து மேலும் 400 கிலோ கிராம் கழிவுத்தேயிலை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் நுவரெலிய சாந்திபுர பகுதியில் வைத்து இரண்டாயிரத்து 745 கிலோ கிராம் கழிவுத்தேயிலையும் கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.