இலங்கைக்கு வழங்கப்படும் கடன் தொகையின் அடுத்த கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கியுள்ளது. இதற்கமைய 164 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையாக கிடைக்கப்பெறவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு கூடியது. இதன்போதே இலங்கைக்கு அடுத்தகட்ட கடன்தொகையை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியம் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.