நுகேகொடை மேம்பாலத்துடனான வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த வேலை காரணமாக மேம்பாலம் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மீள அறிவிக்கும் வரை நுகேகொடை மேம்பாலம் மூடப்பட்டிருக்கும். ஹைலெவல் வீதியின் சாதாரண மருங்குகளை வாகன சாரதிகள் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.