இந்தியாவின் புதுடில்லி நகரில் வளிமாசடைவு அதிகரித்துள்ளது. வளியில் நச்சு கலந்த காற்று பரவியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சுகாதார ரீதியான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். வளிமாசடைவிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளன.
5 மில்லியன் முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளதாக புதுடில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச பாடசாலைகளின் மாணவர்களுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் 50 இலட்சம் முகமூடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. புதுடில்லியை அண்மித்த மாநிலங்களில் விளைச்சல்களை எரிப்பதால் ஏற்படும் புகை புதுடில்லியில் பரவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த வளிமாசடைவு எதிர்வரும் நாட்களுக்கும் நீடிக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் வளிமாசடைவிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென புதுடில்லி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.