fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கிழக்கு கடற்பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2019 13:41

கிழக்கு கடற்பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டின் கிழக்கு கடற்பிரதேசத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற் பிரதேசத்தில் மாலை வேளையில் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையிலான கடற் பிரதேசத்தில் காற்று வடமேற்கு திசையில் வீசுவதுடன் நாட்டை சூழவுள்ள கடற் பிரதேசத்தில் குறிப்பிட்ட திசைக்கு அப்பால் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தை கொண்டிருக்கும். இடியுடன் கூடிய மழையின் போது இந்த கடற்பிரதேசத்தில் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும்.

அக் காலப்பகுதியில் தற்காலிகமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசத்திற்கான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 2, 2019 13:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க