fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரேசிலில் காட்டுத்தீ தீவிரம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 13:40

பிரேசிலில் காட்டுத்தீ தீவிரம்

பிரேசிலில் பரவியுள்ள காட்டுத்தீயினால் இதுவரை சுமார் 50 ஆயிரம் ஹெக்டேயர் வனப்பகுதி அழிவடைந்துள்ளது. ஒருவாரத்திற்கு முன்னர் பரவ ஆரம்பித்த தீ கடும் வெப்பநிலையான காலநிலை மற்றும் அதிகரித்த காற்றின் வேகம் காரணமாக துரிதமாக பரவி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசிலில் கடந்த புதன்கிழமை முதல் தீப்பரவல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. வருடத்தில் கடந்துள்ள காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 67 ஆயிரத்திற்கும் அதிகமான காட்டுத்தீ பரவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரேசில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஜப்பானில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சூரி கோட்டையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் 7 முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. யுனெஸ்கோ அமைப்பினால் மரபுரிமை சின்னமாக சூரி கோட்டை பெயரிடப்பட்டுள்ளது. மரப்பலகைகளால் கோட்டை அமைக்கப்பட்டுள்ளதால் தீ அசுரவேகத்தில் பரவியதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 13:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க