இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் கார்த்திகை 1, 2019 தேசிய செய்திகள் முக்கிய செய்தி படிக்க 1 நிமிடங்கள் பகிர் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பகிர் முந்தைய செய்தி கொழும்பிற்கும் பதுளைக்கும் இடையில் புதிய ரயில் சேவை அடுத்த செய்தி போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் விசேட படைப்பிரிவினரால் கைது வாராந்திர செய்திகள்இன்றைய செய்திகள்வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிசமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்!துல்லியமான, பக்கச்சார்பற்ற மற்றும் உடனடி செய்திகளை உங்களுக்கு வழங்குவதற்கான எங்கள் முயற்சிகள் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது.FacebookLikeYoutubeSubscribe