fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் நடைபெறும் தினத்தில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்படவேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 12:42

தேர்தல் நடைபெறும் தினத்தில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்படவேண்டுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்

தேர்தல் நடைபெறும் தினத்தில் வாக்காளர்கள் எவ்வாறு செயற்படவேண்டுமென்பது குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவண்குணசேகர விளக்கமளித்தார்.

“ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் சட்டமூலத்தில் காணப்படுகின்ற விதிமுறைகளுக்கு அமைய வாக்களிப்பு இடம்பெறுகின்ற தினத்தில் வாக்குச் சாவடியிலிருந்து 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சில செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. உதாரணமாக பிரச்சார செயற்பாடுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் சட்டரீதியாக அனுமதிபெற்று 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி அலுவலகமொன்று காணப்பட்டால் சட்டவிதிமுறைகளுக்கு அமைய காட்சிப்படுத்தப்பட்டுள்ள கட்டவுட்கள் அகற்றப்படத்தேவையில்லை. இதை தவிர 500 மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார செயற்பாடுகள் , கூடியிருத்தல் என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.”

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 1, 2019 12:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo