பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 102 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. குறித்த 102 பொலிஸாரும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இவ்வாறு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.