போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நவகமுவ பொலிசார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது மெனிக்காஹார பகுதியில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர்.
தென்னாபிரிக்காவை சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையை சேர்ந்த அவரது கணவரும் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களை இன்றையய தினம் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.