fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2019 13:39

பயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

பயிர்களுக்காக மேலதிக பசளையினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வருட நெற் பயிர்ச்செய்கைக்காக 2 இலட்சத்து 38 ஆயிரத்து 200 மெட்ரிக் டொன் யுரீயா பசளை தேவைப்படுகிறது. ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டொன் யுரியா தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பெரும்போகத்தில் பயிற்செய்கையளவு அதிகரிக்க கூடுமென்பதால் எதிர்வரும் சில மாதங்களில் நெற்பயிர் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக மாத்திரம் 15 ஆயிரம் மெட்ரிக்டொன் யுரியா பசளையினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே களுகங்கை மற்றும் அம்பன்கங்கை ஆகிய ஆறுகளின் நீரேந்து பகுதிகள்; சேதன உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கையை முன்னெடுக்கும் வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மகாவலி எப் வலயம் நிலைபேறு அபிவிருத்தி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 30, 2019 13:39

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00