தனது இரண்டு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி – பட்டிகுடியிருப்பைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றபோது அயலவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர். எனினும் இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே உயிரிழந்ததோடு 4 வயது பெண் பிள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளது.

பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் கைது
படிக்க 0 நிமிடங்கள்