மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட சொகுசு வரி சிறிய வாகனங்களுக்கு விதிக்கப்படுவதில்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த வரிக்கு சொகுசு மோட்டார் கார்களும் ஜீப் வண்டிகள் மாத்திரமே அடங்குவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைகளின் படி நிதிச்சட்டத்தை சீர்திருத்தி மோட்டார் வாகனங்கள் மீது வரி அறவிட தீர்மானிக்கப்பட்டது. எனினும் அந்த வரி சிறிய ரக மோட்டார் கார்கள், வேன்கள், கெப்வண்டிகள், டபிள் கெப் வண்டிகள், மோட்டார் சைக்கிள், டரைசிக்கிள் ஆகியவற்றுக்கு பொருந்துவதில்லையென நிதி அமைச்சு மேலும் தெரிவித்தது. இதற்கு முன்னர் டபிள் கெப் வண்டிகளுக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும் அடுத்த மாதம் முதலாம் திகதி அந்த வரி நீக்கப்படுகின்றது. இந்த சொகுசு வரி 2019 மார்ச் 6 ம் திகதி அமுலுக்கு வந்தது. அதன் பின்னர் கடன் தவணைக் கொடுப்பனவு ஆவணங்களை திறந்து இறக்குமதி செய்யப்பட்ட சகல சொகுசு வாகனங்களுக்கும் புதிய வரி அடங்குகின்றது.
இதன் அடிப்படையில் 35 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலான டீசல் மற்றும் பெட்ரோல் மோட்டர்கார்கள், ஜீப் வண்டிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் போது அந்த எல்லைகளை தாண்டும் வாகனங்களுக்கு மட்டும் சொகுசு வரி அறவிடப்படும். ஹைப்ரிட் வாகனங்களின் பெறுமதி 40 இலட்சம் ரூபாவை தாண்டினால் அதிகரிக்கும் தொகைக்கு சொகுசு வரி அறவிடப்படும்.அது மின்சாரத்தில் இயங்கும் 60 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலாக வாகனங்களுக்கு பொருந்தும். ஆயிரத்து 800 சிசி யிலும் குறைந்த பெட்ரொல் பயன்படுத்தும் மோட்டார்கார்கள் 2 ஆயிரத்து 300 யிலும் குறைந்த டீசல்கார்கள், ஜீப் வண்டிகள் 200 கிலோவோட்டிலும் குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் கார்கள் சிசி அளவில் அறவிடப்படும் வரி எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நீக்கப்படும். எனினும் ஒக்டோபர் 31 ம் திகதி வரை கடன் தவணை ஆவணங்களை வழங்கி 2020 ஏப்ரல் 21 ம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்டு பெற்றுக்கொள்ளும் வாகனங்கள் சொகுதி வரியிலிருந்து நீக்கப்படுமென்றும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.