20 – 20 உலக கிண்ணத் தொடருக்கு பப்புவா நிவ்கிணியா தெரிவு
Related Articles
அவுஸ்திரேலியாவில் அடுத்த வரும் இடம்பெறவுள்ள 20 – 20 உலக கிண்ண தொடரில் விளையாட பப்புவா நிவ்கினியா அணி தகுதி பெற்றுள்ளது. 2020 ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் 15 ம் திகதி வரை 20 – 20 உலக கிண்ணத்தொடர் இடம்பெறவுள்ளது. தொடருக்கான தகுதி சுற்றுக்கள் டுபாய் மற்றும் அபுதாபியில் இடம்பெற்று வருகின்றன.
12 அணிகள் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்றுக்கள் இடம்பெற்றுவருகின்றன. இதில் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பப்புவா நிவ்கிணியா அணி 5 வெற்றி மற்றும் ஒருதோல்வியுடன் முதல் இடத்தை பெற்று உலக கிண்ண தொடருக்கான தகுதியை தம்வசப்படுத்தியுள்ளது. பி பிரிவில் அயர்லாந்து நான்கு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் முதலிடத்தை பெற்று உலக கிண்ண தொடருக்கான தகுதியை பெற்றுள்ளது.
இதேவேளை உலக கிண்ணத் தொடருக்கான தகுதியை பெற்றுக்கொள்வதற்கென இலங்கை பங்களதேஷ் உட்பட மேலும் 8 அணிகள் தகுதி சுற்றில் தமது திறமையை வெளிக்காட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.