வேட்பாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்
Related Articles
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்று வருகிறது. ஆணைக்குழு வளாகத்தில் அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய விடயங்கள் மற்றும் வேட்பாளர்களிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை தேர்தல் வாக்களிப்பு நேரம் தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.