எல்ல – வெல்லவாய வீதியை தொடர்ந்தும் மூட தீர்மானம்
Related Articles
எல்ல – வெல்லவாய வீதியை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை மற்றும் மண்சரிவு காரணமாக நேற்றிரவு வீதி மூடப்பட்டது.
குறித்த வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டது. இதேவேளை வீதியை திறக்க இன்று காலை தீர்மானிக்கப்பட்டது. எனினும் மண்மேடு சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதால் மீள அறிவிக்கும் வரை குறித்த வீதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.