fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உத்தியோகபூர்வ வாக்களர் அட்டை விநியோக பணிகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2019 15:09

உத்தியோகபூர்வ வாக்களர் அட்டை விநியோக பணிகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிரந்தர ஊழியர்களுக்கு மேலதிகமாக தற்காலிக ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். வாக்காளர் அட்டைகள் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரிகள் மூலம் மாவட்ட தபால் அதிபர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டன. அவை இன்றைய தினம் முதல் விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும் 9 ம் திகதி வரை வாக்களர் அட்டைகள் விநியோகிக்கப்படும். தேர்தல் சட்டமூலத்திற்கு அமைய 9 ம் திகதிக்கு பின்னர் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க முடியாது.

இந்நிலையில் 9 ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்களார்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியுமென தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 26, 2019 15:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க