fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கலிபோர்ணியாவில் காட்டுத்தீயினால் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக அழிவு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 12:53

கலிபோர்ணியாவில் காட்டுத்தீயினால் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக அழிவு

தென் கலிபோர்ணியாவில் காட்டுத்தீயினால் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு அழிந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் மக்கள் அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வரட்சியான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வீடுகளுக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்துவதற்காக 500க்கும் கூடுதலான தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 12:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க