எதிர்வரும் 28 ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 12:56

எதிர்வரும் 28 ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் 28 ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (27) என்பதினால் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் இந்து மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்திற்கு பதிலாக வேறொரு பொருத்தமான தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கு பாடசாலை அதிபர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என். எம். ரணசிங்க அறிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 25, 2019 12:56

Default