வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
Related Articles
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் பணி எதிர்வரும் 3 ம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 9 ம் திகதி நிறைவடையவுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கா விட்டால் எதிர்வரும் 9 ம் திகதிக்கு பின்னர் குறித்த தபால் அலுவலகங்களுக்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியதையடுத்து அதனை பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்களார் அட்டைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அரச அச்சகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இம்முறை உத்தியோபபூர்வ வாக்குச்சீட்டுக்கள் 26 அங்குல நீளமுடையதாகும். கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறமையே இதற்கு காரணமாகும்.