fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க மக்கள் கருத்து

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 12:48

டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்க மக்கள் கருத்து

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிநாட்டு கொள்கைக்கு அமெரிக்காவில் பெரும்பாலானோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு அச்சுறுத்தல்களை சரியாக முகாமைப்படுத்தும் விடயத்தில் ஜனாதிபதி தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் ரொய்டர் நிறுவனம் முன்னெடுத்த கருத்துக்கணிப்பின் போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டவர்களில் நூற்றுக்கு 46 வீதமானோர் ஜனாதிபதி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிராக 40 வீதமானோரே கருத்து வெளியிட்டுள்ளனர். அரசியல் ஆர்வலர்கள் மற்றும் சுயாதீன குழுக்களிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதாக ரொய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 12:48

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க