fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 11:15

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நிலவும் மழையுடனான காலநிலையையடுத்து இரத்தினபுரி, கேகாலை, பதுளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. மீஓயா, கலாஓயா, தெதுரு ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களை அண்மித்துள்ள நீர்த்தேக்கங்கள் வான்பாய்கின்றன.

இதனால் இராஜாங்கனை, தப்போவ, அத்தனகல்ல, மாளுகடவெல ஆகிய நீர்த்தேக்கங்களும், தெதுருஓயா, பத்தலகொட மற்றும் கிம்புல்வான ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மகாவலிக்கு உரித்தான பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் கடமையிலிருந்த வானிலையாளர்  தெரிவித்தார். கடற்பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 11:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க