fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டில் எவ்விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை : ஜனாதிபதி செயலகத்தினால் சுற்றுநிருபம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 10:59

நாட்டில் எவ்விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லை : ஜனாதிபதி செயலகத்தினால் சுற்றுநிருபம்

நாட்டில் எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல்களும் இல்லையென பாதுகாப்பு பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால் போலியான திரிபுபடுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாமென ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து அரச அலுவலகங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தினால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த இடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கென சாதாரண குறிப்பாணைகள் மற்றும் பணிப்புரைகளை கொண்ட கடிதங்களும் சுற்றுநிருபங்களும் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் அவற்றை மேற்கோள் கட்டி அந்த ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக சிலர் அரச நிறுவனங்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் கடிதங்களை வெளியிட்டு வருகின்றனர். அரச நிறுவனங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்காக அதிகபட்ச நடவடிக்கையினை பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பயங்கரவாத அச்சுறுத்தல் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாமென ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 23, 2019 10:59

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க