fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 12:58

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் பல்வேறு இடங்களிலும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. களுகல, பிட்டவர, கினிகத்தேனை, கடவல, வட்டவளை ஆகிய பகுதிகளிலும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் குடாகம, கொட்டகலை, சென்ட் கிளேயார், தலவாக்கலை, ரதெல்ல, நானுஓயா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்கவேண்டுமென ஹட்டன் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

நீரேந்தும் பகுதிகளிலும் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளது. காசல்ரீ, கெனியோன், மவுசாகலை, லக்ஷபான, மேல் கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களம் வெள்ளப்பெருக்கு தொடர்பான அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. களனி மற்றும் அத்தனகல ஓயாவை அண்மித்த பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகிவருகிறது. அதற்கமைய களனி கங்கையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் களனி கங்கைக்கு அருகில் தாழ்நில பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்கவேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. அத்தகல ஓயாவின் துணமலை பகுதியிலும் சிறியளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 22, 2019 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo