தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்ய விசேட சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 13:14

தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்ய விசேட சுற்றிவளைப்புக்கள்

தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நபர்களை கைதுசெய்ய விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்முனை கடற்கரையில் கடற்படையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகுகள், மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களை கொள்வனவு செய்வதற்கென தயார்நிலையிலிருந்த மூன்று வாடிக்கையாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தில் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 13:14

Default