fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிலி இராச்சியத்தில் ஆடைத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 12:56

சிலி இராச்சியத்தில் ஆடைத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி

சிலி இராச்சியத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ஆலைத் தொழிற்சாலைக்கு நுழைந்த கொள்ளையர்களின் செயற்பாட்டினால் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் சண்டியாகோவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சிலியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளதுடன் அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதா தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் கட்டணத்தை அதிகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 21, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க