fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 15:16

படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல்.எச்.எஸ்.சி சில்வா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் காணி உறுதிப்பத்திரங்களை கையளித்தார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 15:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க