ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்
Related Articles
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 8ம் திகதி முதல் நேற்றையதினம் வரை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறைகள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும், ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.