மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 11:16

மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை

பதுளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு இன்று காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் நீடிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் இந்த பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக நிலம் தாழ் இறங்கல், மண் மேடு சரிந்து விழல், பாறைகள் புரளுதல் போன்ற மண்சரிவு அனர்த்த அடையாளங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு அமைப்பு இந்த பிரதேச மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 18, 2019 11:16

Default