தபால் ஊழியர்களது விடுமுறைகள் ரத்து

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 12:16

தபால் ஊழியர்களது விடுமுறைகள் ரத்து

தேர்தல் காலப்பகுதியில் சகல தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் இன்றுமுதல் அமுலாவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு சீட்டுக்கள் நாளை தபாலிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் இராணுவத்தினர் எதிர்வரும் 31ம் திகதியும் நவம்பர் முதலாம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.

மாவட்ட செயலகம், தேர்தல்கள் காரியாலயம் மற்றும் பொலிஸார் எதிர்வரும் 4ம் திகதி தபால் வாக்கினை பதிவு செய்யவுள்ளனர். இவர்களுக்கு 7 ம் திகதி மேலதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 12:16

Default