fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 12:03

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று மக்களின் உரிமைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

குறித்த விமான நிலைய நிர்மாணப்பணிகளுக்கென 2 ஆயிரத்து 250 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரத்து 950 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தால் முதலீடு செய்யப்பட்டதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடான விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவின் சென்னை திருச்சி மற்றும் கொச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானங்கள் வருகை தரவுள்ளன. இந்தியாவின் எயார் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த எலியன்ஸ் எயார் விமானம் மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தரைமார்க்கமாக சுமார் 400 கிலோமீற்றர் பயணம் செய்தே கொழும்பு விமான நிலையத்மை வந்தடைய வேண்டிய நிலை காணப்படுகிறது. எனினும் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் யாழ் நகரிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பலாலியில் அமைந்துள்ளது. இதனால் யாழ் மக்களின் குறித்த பிரச்சினைக்கு இது தீர்வாக அமையவுள்ளது. விமான ஓடுபாதை 2.3 கிலோமீற்றர் வரை விஸ்த்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட புனரமைப்பின் போது இது மேலும் ஒரு கிலோமீற்றர் நீடிக்கப்படுமென சிவில் விமானசேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க