fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சென்னை விமான நிலையத்தில் யாழிற்கான முதலாவது விமானம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 11:58

சென்னை விமான நிலையத்தில் யாழிற்கான முதலாவது விமானம்

சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான விமான சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. எயார் இந்தியா நிறுவத்தின் தலைவரும் எயார் இந்தியா குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்வானி லொஹானியின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு சென்னை விமான நிலையத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய அஷ்வானி லொஹானி சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலானை விமான சேவை ஆரம்பித்து வைக்கப்படுவதனை பெருமையாக கருதுகின்றேன் என்று தெரிவித்தார். நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுப்பையாவும் உரையாற்றினார். அலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையில் ஈடுபடும் 55 ஆவது நகரமாக யாழ் பலாலி சரவதேச விமன நிலையம் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வு சென்னையில் இடம்பெற்றதை அடுத்து பாலாலி சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 17, 2019 11:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க