யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் 80 மில்லியன் ரூபா செலவில் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. வீடொன்று 10 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படுகிறது. தேசிய கொள்கைகள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

யாழில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்
படிக்க 0 நிமிடங்கள்