ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு வீதம் 85 சதவீதமாக அதிகரிக்ககூடும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2019 14:59

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு வீதம் 85 சதவீதமாக அதிகரிக்ககூடும்

ஜனாதிபதித் தேர்தலின் சகல பெறுபேறுகளையும் அடுத்த மாதம் 18 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியளவிலேயே வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்பிட்டிய தேர்தலின் வாக்களிப்பு உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக தெரிவித்த அவர் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 தொடக்கம் 85 சதவீதமாக அமையக்கூடும் என்றும்  தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பலிலளித்த அவர் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் வாய்ப்பும் காணப்படுகிறது என்றும் தெவிரித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 16, 2019 14:59

Default