பொய் பிரச்சாரங்கள் நம்பி எமாறவேண்டாமென பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர். மட்டக்குழி பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று இருப்பதாக மேற்கொள்ளப்பட்டுவரும் பிரச்சாரம் பொய்யானதென பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
மட்டக்குழி பொலிஸ் பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் அதனை அண்மித்த பாடசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான ஒரு வாகனம் இருப்பதாக மட்டக்குழி பொலிஸாருக்கு தகவல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அதிசொகுசு வாகனம் ஒன்று நேற்றிரவு தொழில்நுட்ப கோலாறு காரணமாக உரிமையாளரல் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் இதனை கண்டு பதற்ற நிலை அடைந்துள்ளனர். அவ்வாகனத்தின் உரிமையாளர் குறித்த இடதிற்கு வருகை தந்தும் கூட இது தொடர்பில் பல்வேறு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வித சந்தேகத்திற்குரிய நிலைமைகள் இவ்விடத்தில் காணப்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.