உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் விசேட பொலிஸ் குழு இன்று கூடவுள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இவ்விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆணைக்குழுவுக்கு இதுவரை 65க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடும் உள்ளடங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் ர்.ஆ.டீ.P. ஹேரத் தெரிவித்துள்ளார்.