fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலித்தீன்கள் அற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள் கைச்சாத்து

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2019 15:01

பொலித்தீன்கள் அற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு ஆளும் மற்றும் எதிர்கட்சி பிரதிநிதிகள்  கைச்சாத்து

பொலித்தீன்கள் அற்ற ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கா ஆளும் மற்றும் எதிர்கட்சி மக்கள் பிரிதிநிதிகள் இன்று கைச்சாத்திட்டனர்.

ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார நடவடிக்கைகளுக்கென பொலித்தீன்களை பயன்படுத்தி சுற்றாடலை மாசுபடச் செய்யாமல் இருப்பதற்கும் வன்முறைகள் அற்ற தேர்தலை நடாத்துவதற்கும் உறுதி மொழி பூண்டு மக்கள் மஹஜரில் கைச்சாத்திடும் நிகழ்வு மாத்தளை நகரில் இன்று ஆரம்பமாகியது. மாத்தளை ஊடகவியலாளர்களின் சங்கம் இதனை வழி நடத்துகிறத.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை பிரதிநிதித்துவப்படுத்தி ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மற்றும் மாத்தளை நகர பிதா டல்ஜித் அலுவிகாரே ஆகியோர் இதில் கைச்ஸ்ரீசாத்திட்டனர்.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் அமைச்சர் ரோஹன திசாநாயக்க மற்றும் மாத்தளை பிரதேச சபை தவிசாளர் கபில பண்டாரஹீந்தெனிய ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர். ஜேவிபி மாத்தளை மாவட்ட தலைவர் கமகெதர திசாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவிற்கு பதிலாக இம்மஹஜரில் கைச்சாத்திட்டார். ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதன் போது இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 15, 2019 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க