தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா, தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் இதுவாகும். இதே போன்று சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரை அஷோக் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்த பாகமதி படத்தை இயக்கியிருந்தார்.